fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரியில் விஜயகாந்த் பிறந்த தின விழாவில் நலத்திட்ட உதவி

கிருஷ்ணகிரியில் விஜயகாந்த் பிறந்த தின விழாவில் நலத்திட்ட உதவி

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக, விஜயகாந்த் பிறந்தநாள் விழாவை, நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடியது.

கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள அங்காளம்மன் கோவிலில் சிறப்புப்பூஜைகள் நடைபெற்றன.

200 பேருக்கு அன்னதானம் வழங்கி, ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஒன்றியச் செயலாளர் விஜய் வல்லரசு, தலைமை வகித்தார். நகரச் செயலாளர் கனகன் முன்னிலைவ கித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் அன்பரசு ,துப்புரவுப் பணியாளர்களுக்கு சேலைகள் வழங்கினார்.

காவேரிப்பட்டினம் பஸ் நிலையத்தில் தேமுதிக சார்பில் கோவிலிலும் சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டு, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் சின்ராஜ், உட்பட நிர்வாகிகள், வர்த்தக அணி காளியப்பன் ரமேஷ், பிரபு முன்னாள் ஒன்றிய செயலாளர் ரஞ்சித் குமார் கணேசன் அன்வர் சுந்தரேசன் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img