fbpx
Homeபிற செய்திகள்மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு பணி நியமன ஆணை வழங்கினார் ஆட்சியர்

மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு பணி நியமன ஆணை வழங்கினார் ஆட்சியர்

கோவை ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி கலையரங்கத்தில் நேற்று(ஆக.25) மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலகம் மற்றும் விஆர்யுவர் வாய்ஸ் என்ற தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து நடத்திய வேலை வாய்ப்பற்ற செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகா மில், மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், 22 பயனாளிகளுக்கு தனியார் நிறுவன வேலைவாய்ப்பு பணி நிய மன ஆணையினை வழங் கினார்.

மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற் றுத் திறான ளிக ளுக்கான திருமண நிதியுதவி வழங் கும் திட்டத்தின் கீழ் 21 பயனாளிகளுக்கு ரூ.8 இலட்சம் மதிப்பில் திருமண நிதி உதவி மற்றும் தலா 8 கிராம் தங்க நாணயங்கள், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு ரூ. 5.85 இலட்சம் மதிப்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் என மொத்தம் 30 பயனா ளிகளுக்கு ரூ.13.85 இலட் சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிக ளை யும், மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன், திறன்கள் அடிப்படையில் வேலை வாய்ப்பினையும் வழங்கி வருகிறது.

இந்நிலையில், தனி யார் துறைகளிலும் மாற் றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் விஆர்யுவர் வாய்ஸ் என்ற தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கென்று இச்சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சிறப்பு முகாமில் செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் பாதிக்கப்பட்ட 113 மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

இதுவரை 22 பயனாளிகளுக்கு தனியார் நிறுவனங்களின் (Innov and Source and Quess Corp LTD) மூலம் வேலைவாய்ப்பு பெறு வதற்கான பணிநி யமன ஆணைகள் வழங்கப் பட்டுள்ளன.

பல்வேறு தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பினை வழங்குவதற்கு முன் வந் துள்ளன. வரும் செப்டம்பர் மாதத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு Private Job Placement Counselling Center தொடங்கப்பட உள்ளது.

இதனை மாவட்ட நிர்வாகம் மற்றும் விஆர் யுவர் வாய்ஸ் என்ற தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இம்மையத்தின் மூலம் வேலைவாய்ப்பு வேண்டி விண்ணப்பிக்கும் மாற்றுத் திறனாளிகளின் தகுதிகள், திறன்களுக்கு தகுந்தவாறு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.
இம் முகாமில், மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் வசந்தராம் குமார், தனியார் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பேசித் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img