fbpx
Homeதலையங்கம்தீர்ப்புக்கு வரவேற்பு, முதல்வருக்கு நன்றி!

தீர்ப்புக்கு வரவேற்பு, முதல்வருக்கு நன்றி!

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கடந்த ஆகஸ்டு 14ம் தேதி 28 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். அதில் 4 பேர் பட்டியலினத்தவர்கள்.

அனைத்து சாதியைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகராகும் விவகாரத்தில், தமிழக அரசின் விதிகள் செல்லும் என்று சென்னை உயர்நீதி மன்றம் ஓர் வரலாற்றுத் தீர்ப்பை வழங்கி உள்ளது. ஆகம விதிப்படி இயங்கும் கோவில்களில் அந்த ஆகம விதிப்படி அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எந்தெந்த கோவில்களில் ஆகம விதிகள் பின்பற்றப்படுகின்றன? எந்தெந்த கோவில்களில் ஆகம விதிகள் பின்பற்றப்படவில்லை என்பதை அறிய ஐந்து பேர் குழு அமைக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஐந்து பேர் குழுவில் ஆகமம் தெரிந்தவரும் இடம்பெறுவர். அப்படி இடம் பெறுவோர், எல்லா கோவில்களையும் ஆகமக் கோவில்கள் என அறிவித்தால் என்னவாகும்? இது ஆபத்தாகி விடும் என்பது அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களின் கவலையாக மாறி உள்ளது. அதைப்பற்றி எல்லாம் கவலை கொள்ளத் தேவை இல்லை.

உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தந்த ‘தமிழக அரசின் அர்ச்சகர் நியமனங்களும் அதற்குரிய விதிகளும் செல்லும்‘ என்பது வரலாற்று வெற்றித் தீர்ப்பாகும் என்பதில் சந்தேகமே இல்லை. எதிர்த்து போடப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.

இந்த வெற்றி சாதி, மதம், இன சார்பற்ற திராவிட முன்னேற்ற கழகத்திற்கு, கழக அரசுக்கு கிடைத்த இமாலய வெற்றி.

அதற்கு யார் காரணம்? சமூக நீதிக்கான சரித்திர நாயகராம் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் என்றால் யாரும் மறுக்க முடியாது.

உயர்நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்போம். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்தையும் நன்றியையும் மனமார தெரிவிப்போம்!

படிக்க வேண்டும்

spot_img