பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோவை வட்ட அலுவலகம், ஈரோடு மாவட்டம் பவானியில் 65-வது கிளையைத் திறந்து, தனது சேவையை விரிவாக்கம் செய்துள்ளது. இதனை வங்கியின் மண்டல மேலாளர் பவன் சிங், வட்டத் தலைவர் சாஜித் ஹுசேன் ஆகியோர் முன்னிலையில், ஜே.கே.கே.முனிராஜா கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜே.கே.எம். ஜெயப்பிரகாஷ் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். பவானி பகுதி மக்களுக்கு நிதிச் சேவைகளை வழங்குவதில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் இந்தக் கிளை முக்கிய பங்காற்றும்.



