fbpx
Homeபிற செய்திகள்என்ஏசி ஜுவெல்லர்ஸ் ஷோரூம் திறப்பு விழா:அறிமுக சலுகையாக இலவச தங்க நாணயம்

என்ஏசி ஜுவெல்லர்ஸ் ஷோரூம் திறப்பு விழா:அறிமுக சலுகையாக இலவச தங்க நாணயம்

கோவை ஆர்.எஸ். புரத்தில் என்ஏசி ஜுவெல் லர்ஸ் நிறுவனத்தின் நவீன ஆபரணப் பிராண்டான ஸ்டைலோரி கொங்கு மண்டலத்தில் தனது வர்த்தக விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக முதல் விற்பனை நிலையத்தை நேற்று (25ம் தேதி) துவக்கியுள்ளது.

இது நிறுவனத்தின் மூன்றாவது சில்லறை விற்பனை நிலையமாகும். புதிய கிளையை நடிகை சஞ்சனா ஏ.கே. திறந்து வைத்தார். கோவை ஆர்.எஸ்.புரம் சர். சண்முகம் ரோட்டில் அமைந்துள்ள இந்த விற்பனை நிலையத்தில், சான்றளிக்கப்பட்ட 92.5% வெள்ளி ஆபரணங்கள், ஐஎஸ்ஐ சான்றளிக்கப்பட்ட ஆய்வக வைரங்கள் மற்றும் பிஐஎஸ் ஹால்மார்க் பெற்ற 9 காரட் தங்க ஆபரணங்கள் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஸ்டை லோரி மற்றும் நாக் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் என்ஏசி ஜுவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் ஆனந்த ராமானுஜம், என்ஏசி ஜுவெல்லர்ஸ் தலைவர் மற்றும் மேலாண்மை இயக் குநர் அனந்த பத்மநாபன், நடிகை சஞ்சனா ஆகியோர் கூறியதாவது:- இங்குள்ள” வெள்ளி, ஆய்வக வைரம், தங்க ஆபரணங்கள் என அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களின் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் ஸ்டைலோரி தயாரிப்புகள் உள்ளன. வடிவமைப்பும், விலை நிர்ணயமும் இன்றைய தலைமுறையினரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது.

மேலும் அறிமுகக் கால சலுகையாக ஒவ்வொரு கொள்முதலுக்கும் இலவச தங்க நாணயம் வழங்கப்படுவதுடன், கடைக்கு வருகை தரும் அனைவருக்கும் ரூ.1 லட்சம் மதிப்பிலான ஆபரணங்களை வெல்லும் வாய்ப்பும் வழங்கப்படும்.
மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img