fbpx
Homeபிற செய்திகள்திருவண்ணாமலையில் ஆசிரியர் தகுதித்தேர்வு முன்னேற்பாடுகள் ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலையில் ஆசிரியர் தகுதித்தேர்வு முன்னேற்பாடுகள் ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத் தில் ஜூலை 4 மற்றும் 5-ம் தேதிகளில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


மாவட்டத்தில் 28 தேர்வு மையங்களில் தாள்-1 மற்றும் தாள்-2 தேர்வுகள் நடைபெறுகின்றன. தாள்-1-ல் 1,999 பேரும், தாள்-2-ல் 5,743 பேரும், மொத்தம் 7,742 ஆசிரியர்கள் தேர்வெழுத உள்ளனர். இதில் 182 மாற்றுத்திறனாளி ஆசிரியர்களும் பங்கேற்கின்றனர்.

தேர்வு மையங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், போதிய பேருந்து வசதி, காவல் பாதுகாப்பு, அவசர மருத்துவ உதவி, தடையற்ற மின்சாரம், தீயணைப்பு பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் முழுமையாக செய்யுமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்குத் தேவையான அனைத்து சிறப்பு வசதிகளையும் உறுதி செய்யவும் அறிவுறுத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img