fbpx
Homeபிற செய்திகள்பிளஸ் 2 முடித்த மாணவர்களின் 100 சதவீத உயர்கல்வி சேர்க்கை உறுதி செய்ய வேண்டும் கரூர்...

பிளஸ் 2 முடித்த மாணவர்களின் 100 சதவீத உயர்கல்வி சேர்க்கை உறுதி செய்ய வேண்டும் கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சி.முத்துக்குமரன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக உயர்கல்வி வழிகாட்டுதல் குழு ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.முத்துக் குமரன் தெரிவித் ததாவது:
கரூர் மாவட்டத்தில் 2025 &-26 ஆம் கல்வி யாண்டில் 59 அரசுப் பள்ளிகளில் பயின்ற 5251 மாணாக்கர்கள் +2 பொதுத் தேர்வை எழுதியதில், 4814 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற் றுள்ளனர். தேர்ச்சி பெற்ற 4814 மாணாக்கர்களில் 4720 மாணாக்கர்கள் உயர்கல்விக்கு விண்ணப் பித்துள்ளனர். +2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்த 303 மாணாக்கர்களில் 298 மாணாக்கர்கள் துணைத் தேர்வுக்கு விண்ணப் பித்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் +2 முடித்த மாணவர்கள் 100% உயர்கல்வி சேர்வதை உறுதிபடுத்தும் விதமாக பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக உயர்கல்வி வழிகாட்டுதல் குழு ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெறுகிறது. கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிக்கு நேரடியாக கள ஆய்வு செய்து, தலைமை ஆசிரியர் மற்றும் உயர் கல்வி ஆசிரியருடன் ஆலோசனை மேற்கொண்டு, +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற / தேர்ச்சி பெறாத மாணவர்களின் நிலையை அறிந்து, தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் உயர்கல்விக்கு விண்ணப்பித்துள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

உயர்கல்விக்கு விண்ணப் பித்த மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டு கல்லூரியில் சேர்க்கை நடைபெறும் வரை கண்காணித்தும், துணைத்தேர்வு எழுதிய மாணவர்களை 31/10/2026 வரை தொடர்ந்து கண் காணித்து, அவர்களையும் உயர்கல்வியில் சேர்வதை உறுதிசெய்திட வேண்டும்.
தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளனரா என அறிந்து, துணைத் தேர்விலும் தேர்ச்சி பெறாத மாணவர்களை மிஜிமி/றிஷீறீஹ்tமீநீலீஸீவீநீ போன்ற திறன் மேம்பாட்டு படிப்புகளில் சேர்வதை உறுதி வேண்டும்.

மேலும், உயர் கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர் களின் வீடுகளுக்கு சென்று பெற்றோர் முன்னிலையில் கள ஆய்வு செய்து, அவர்கள் உயர்கல்வி சேராததற்கான காரணம் அறிந்து, அவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தி அவர்களை உயர்கல்வி சேர்ந்துள்ளதை உறுதிசெய்திட வேண்டும். கள ஆய்வின் போது தலைமை ஆசிரியர், காவல்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் அலுவலர்களோடு கண்காணிப்பு அலுவலர்கள் மாணவர்கள் உயர்கல்வி சேர்வதற்கு உதவிகளை செய்ய வேண்டும். உயர்கல்வி சேராத ஒவ்வொரு மாணவருடைய காரணங்களை தெரிந்து கொண்டு, அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர்கல்வியில் மாணவர்களுக்கு ஏதேனும் உதவிகள் பெற, மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு – 95665 66727 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.ராஜீ, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) மு.சத்திய மூர்த்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img