Homeதலையங்கம்அதிமுக ஊழலுக்கு அதிமுகவே சாட்சி!

அதிமுக ஊழலுக்கு அதிமுகவே சாட்சி!

ஆட்சிக்கு வந்து முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகள், ஊழலை வெளிக்கொணருவதில் முனைப்பு காட்டினார்.

எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் வீடுகளிலும் தொடர்புடைய இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தி ஆவணங்கள், பணத்தை பறிமுதல் செய்தனர்.

ஆனால், பழிவாங்கும் எண்ணத்திலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் போலீசார் சோதனை நடத்துவதாக அதிமுக தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது. வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளன. சாட்சியங்கள், ஆவணங்கள் அடிப்படையில் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கும்.

இது ஒருபுறமிருக்க, அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு பல கோடி சொத்து சேர்த்ததற்கு அதே கட்சியைச் சேர்ந்த 2 பேர் சாட்சியங்களாக மாறி இருக்கிறார்கள்.

ஒருவர் இபிஎஸ் ஆதரவாளரான மாஜி அமைச்சர் செல்வகுமார். இன்னொருவர் ஓ.பி.எஸ். ஆதரவாளரான புகழேந்தி.
ஓ.பன்னீர்செல்வம் பணம் வைத்திருக்கிறார்.

வசூல்ராஜா எம்பிபிஎஸ் போல வசூல்ராஜா ஓபிஎஸ். உலக கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பெறும் அளவிற்கு அவரிடம் பணம் இருக்கிறது. முறைகேடாக அவர் சம்பாதித்த பணம்என ஜெயக்குமார் சாட்டையை சுழற்றி இருக்கிறார்.

அதற்கு பதிலடி கொடுத்துள்ள புகழேந்திதெருவில் ஒரு இடத்தில் தொடங்கி, அடுத்த தெரு வரை ஜெயக்குமாரின் வீடு தாஜ்மஹால் பேலஸ் மாதிரி இருக்கும். பிறக்கும்போதே உங்க அப்பா என்ன கோடீஸ்வரரா? எப்படி இவ்வளவு பெரிய வீடு கட்டினீர்கள்? அப்படி ஓபிஎஸ் ஊழல் செய்தார் என்றால் ஏன் அப்போதே சொல்லவில்லை.

அது நடக்கும்போதெல்லாம் நீங்கள் கூடவே தானே இருந்தீர்கள். எடப்பாடி பழனிசாமி தானே முதலமைச்சர்? ஏன் தடுக்கவில்லை? அப்போ எல்லோரும் ஊழல் செய்தீர்களா?என கேட்டுள்ளார்.

புகழேந்தி கேட்பதிலும் நியாயம் இருக்கிறது. ஆக, அதிமுக ஆட்சியில் ஊழல் நடந்திருப்பதை ஜெயக்குமாரும் புகழேந்தியும் தோலுரித்துக் காட்டி இருக்கிறார்கள்.வாருங்கள், பாருங்கள்` என கட்டியம் கூறி அம்பலப்படுத்தி இருக்கின்றனர்.

ஓபிஎஸ். இபிஎஸ் என அதிமுக பிளவுபட்டதன் வெளிப்பாடாக மட்டும் இதனைப் பார்க்கக் கூடாது. அவர்கள் சொன்னதன் உள்ளார்ந்த அர்த்தத்தை தமிழர்கள் அனைவரும் உள்வாங்கிக் கொண்டுள்ளனர்.

நீதிமன்ற தீர்ப்புகளோடு, 2024 பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தீர்ப்பும் வரத்தானே போகிறது!

படிக்க வேண்டும்

spot_img