இந்திய மகளிர் மருத்துவ எண் டோஸ்கோ பிஸ்ட்கள் சங்க தமிழ் நாடு பிரிவு கோவை மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ சங்க கோவை பிரிவு மற்றும் ராவ் மருத்துவ மனை ஆகியவை இணைந்து, கோவையில் இரண்டு நாள் தேசிய மாநாட்டை யுவா ஐஏஜ் – எண்டோ இன்சைட் 2025 என்ற பெயரில் கோவை அவினாசி சாலையில் உள்ள தி ரெசிடென்சி டவர்ஸில் நடத்தியது. இதில் தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பல மாநி லங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட இளம் மருத்துவர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாடு நேரடி அறுவைச் சிகிச்சை பயிலரங்கத்துடன் தொடங்கியது. இதில் ராவ் மருத்துவமனை மற்றும் கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரியில் நடந்த அறுவைச் சிகிச்சைகள் ஒரே நேரத்தில் திரையில் ஒளி பரப்பப்பட்டன.
பல்வேறு அறிவியல் அமர்வுகளும் நடைபெற்றன. மேம்பட்ட லேப்ராஸ் கோபி, ஹிஸ்ட ரோஸ்கோபி பயிற்சிகள், ஐவிஎப் மற்றும் ஆர்ட் துறைகளுக்கான மருத்துவ பயிலரங்கம் ஆகியவை இளம் மருத்துவர்களுக்கு வளமான கற்றல் வாய்ப்பாக அமைந்தன.
இரண்டாம் நாள் அமர்வில், ஐஏஜ் தலைவர் டாக்டர் கல்யாண் பர்மடே ரோபோக்களின் காலத்தில் லேப்ராஸ் கோபிக் அறுவைச் சிகிச்சையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
ரோபாட் டிக்ஸ் வளர்ந்தாலும், அடிப் படை அறுவைச் சிகிச்சை திறன்கள் மிக அவசியம் என அவர் எடுத்துரைத்தார்.
ஐஏஜ் தமிழ்நாடு செயலாளர் மற்றும் ராவ் மருத்துவமனை இணை இயக்குநர் டாக் டர் தாமோதர் ராவ், எண்டோ இன்சைட் 2025 இளம் மருத்துவர்களுக்கு நடைமுறை அறுவைச் சிகிச்சை அனுபவத்தை வழங்கும் நோக்கில் வடி வமைக்கப்பட்டது என்றார்.
ராவ் மருத்துவமனை, இயக்குநர் டாக்டர். ஆஷா ராவ், இது ஒரு மாநாடு மட்டுமல்ல இளம் மகளிர் மருத்துவர்களின் திறமை மற்றும் நம்பிக்கையை வளர்க்கும் தளம் என்று தெரிவித்தார்.
விழாவில் மகளிர் மருத்துவ எண்டோஸ் கோபி அறுவை சிகிச்சை நிபுணர் மாஸ்டர் ஆஃப் மாஸ்டர் கல்வி ஆசிரியர் டாக்டர் ஹபீஸ் ரெஹ்மானுக்கு துரோ ணாச்சார்யா விருது வழங்கப்பட்டது.



