சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக அம்பேத்கர் இருக்கையின் சார்பில், 76-ஆவது அரசியலமைப்பு தின விழா பல்கலைக்கழக மைய நூலகத்தில் அண்மையில் கொண்டாடப்பட்டது.விழாவில் பங்கேற்ற அனைவரும் அரசியலமைப்பு சட்ட உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதில், அம்பேத்கர் இருக்கை உதவிப் பேராசிரியை வீ.ராதிகாராணி வரவேற்புரை ஆற்றினார். பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் எஸ்.அறிவுடைநம்பி முதன்மை உரை ஆற்றினார்.
மொழியியல் புல முதல்வர் அரங்கபாரி வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக பேராசிரியர் கேப்டன் ஜெய்சங்கர், பேராசிரியர் லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் சென்னை சட்டப் பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவர்கள் சட்ட கட்ட மைப்பின் மாதிரி சட்ட வரைமுறை எப்படி நடந்தது என்பதை நிகழ்ச்சியாக நடித்துக் காட்டினர். நிகழ்ச்சியில் சிதம்பரம் அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி பள்ளி மற்றும் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பேராசிரியர் க.சௌந்தரராஜன் நன்றி கூறினார்.



