fbpx
Homeபிற செய்திகள்டாக்டர் விக்ரம் சாராபாய் வினாடி வினா போட்டி - மாணவ, மாணவிகள் அசத்தல் கிட்ஸ் கிளப்...

டாக்டர் விக்ரம் சாராபாய் வினாடி வினா போட்டி – மாணவ, மாணவிகள் அசத்தல் கிட்ஸ் கிளப் பள்ளி முதல் இடம்

திருப்பூர், காங்கேயம் சாலையில் அமைந்துள்ள காயத்ரி மஹாலில் பள்ளிகளுக்கு இடையேயான டாக்டர் விக்ரம் சாராபாய் வினாடி வினா போட்டி – 2025 வித்யா விகாஷ்னி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி சார்பில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த 27 பள்ளிகளின் சார்பில் 212 மாணவர்கள் கலந்து கொண்டனர். வினாடி வினா நிகழ்ச்சியை சென்னையை சேர்ந்த க்விஸ் மாஸ்டர் சூர்ய நாராயணன் நடத்தினார். போட்டியில் கிட்ஸ் கிளப் பள்ளி மாணவர்கள் முதல் இடத்தை பெற்றனர். ஏ.வி.பி. ட்ரஸ்ட் பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடத்தையும் வித்யா விகாஷ்னி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, திருப்பூர் பிராந்திய மேலாளர் ம.செல்லதுரை பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அவர் பேசும்போது, அப்துல் கலாம் கூறியது போல் வருங்கால உலகம் எப்படி இருக்க வேண்டும், வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என கனவு காணுவதோடு வள்ளுவப் பெருந்தகை கூறியது போல அந்த நோக்கத்தை அடைய மெய் வருந்த உழைக்க வேண்டும். திருப்பூர் பல வாய்ப்புகளை கொண்ட நகரம். வருங்காலம் உங்களுக்கானது, என வாழ்த்தினார்.

நிகழ்ச்சியை வித்யா விகாஷ்னி அர்ஜுனா அறக்கட்டளை, அமுல் நிறுவனம், கல்வி ஆலோசனைக்கான இன்ஃபேக்ட் நிறுவனம் மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா,- திருப்பூர் ஆகியோர் இணைந்து நடத்தினர். வித்யா விகாஷ்னி பள்ளி தாளாளர் பிரணவ் நகுலன் ஏற்பாடுகளை செய்திருந்தார். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img