தென்காசியை அடுத்த மேலகரம் யாதவர் சமுதாய நலச் சங்கம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா, 12ம் ஆண்டு விழா, தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா என முப்பெரும் விழா நடந்தது.
மேலகரம் திரிகூட மகாராஜா கவிராயர் திருமணமண்டபத்தில் நடந்த விழாவிற்கு சங்க தலைவர் டாக்டர் ராமசுப்பு தலைமை வகித்தார். செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். துணைத்தலைவர் சப்பாணிமுத்து துவக்கி வைத்தார்.
தணிக்கையா ளர் திருமலைச்சாமி சிறப்புரையாற்றி னார். கடந்த ஆண்டு நடந்த பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு போதி மன மருத்துவமனை மருத்துவர் கார்த்திக் துரைசாமியும், 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஓய்வு பெற்ற கனரா வங்கி முதுநிலை மேலாளர் ராதாகிருஷ்ணன் வழங்கினர். தமிழ் ஆசிரியர் காளிதாசன் நினைவு பரிசுகளை வழங்கினார்.
கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைவருக்கும் டாக்டர் ராமசுப்பு பரிசு வழங்கினார். யாதவர் சமுதாய நல சங்க பொருளாளர் சுரேஷ் நன்றி கூறினார். விழாவில் தென்காசி அன்னை கலைப் பள்ளி மாணவ மாணவிகளின் நடனம் மற்றும் உறியடி திருவிழா உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
சங்க துணை செயலாளர் விஜயகுமார், துணைப் பொருளாளர் ராமச்சந்திரன், திருமலைச்சாமி, ஓய்வு பெற்ற காவல்துறை சீனிவாசன், ராஜாமணி, ஜான் அமல்ராஜ், பொதுப்பணித் துறை முருகன், முத்தூட் முருகன் மற்றும் சமுதாய உறுப்பினர்கள் உட்பட கலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சங்க ஒருங்கிணைப்பாளர் முப்புடாதி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.