Homeபிற செய்திகள்நீலகிரியில் உழவர் நலத்துறை அமைச்சர் ஆய்வு

நீலகிரியில் உழவர் நலத்துறை அமைச்சர் ஆய்வு

நீலகிரி மாவட்டம், உதகை, தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  தலைமையில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் முன்னிலையில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை, வேளாண் பொறியியல்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகவரித்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் 116 பயனாளிகளுக்கு ரூ.4.23 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில்,  வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், வேளாண்மைப் பொறியியல்துறை சார்பில், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்கள்.

பின்னர், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில், விவசாய பெருங்குடிமக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் பொறியியல்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகவரித்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் முறையாக கொண்டு சேர்க்கிறார்களா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அலுவலர்கள் அனைவரும் நேரிடையாக விவசாயிகளை சந்தித்து, அவர்களுடன் தொடர்பில் இருந்து அரசு நலத்திட்ட உதவிகளை அவர்கள் பெறும் வகையில் உறுதுணையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் தேவைப்படும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, குளிரூட்டும் அறை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மத்திய பேருந்து நிலையம் எதிரிலுள்ள மைதானதை  தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று, சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா  ஆகியோர் மொத்தம் ரூ.4.23 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இக்கூட்டத்தில், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலர் அபூர்வா இ.ஆ.ப., வேளாண் விற்பனை வேளாண் வணிகத்துறை ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலர் பிரகாஷ் இ.ஆ.ப., தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., வேளாண்மைத்துறை இயக்குநர் பா.முருகேஷ் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு, வேளாண்மை பொறியியல்துறை தலைமைப் பொறியாளர்கள் முருகேசன் (சென்னை), சந்திரசேகர் (சென்னை), தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலாமேரி, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மைப் பொறியியல்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், துணை இயக்குநர்கள் அப்ரோஸ் பேகம், அனிதா (பொ), தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்கள் பைசல்,(உதகை), விஜயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img