fbpx
Homeபிற செய்திகள்உலக சாதனை கராத்தே போட்டி: கோவை மாணவ, மாணவிகள் அபாரம்

உலக சாதனை கராத்தே போட்டி: கோவை மாணவ, மாணவிகள் அபாரம்

கடந்த 26 ஆம் தேதி (சனிக்கிழமை) கோவா காலங்கட் பஞ்சாயத்து மைதானத்தில் கராத்தே போட்டி மற்றும் ஏ.பி.ஜே உலக சாதனை போட்டி நடைபெற்றது.

அதில் கோவையை சேர்ந்த 24 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண் டனர். இதில் மதன் குமார், மனோஜ் குமார், ஸ்ரீ முகுந்தன் ஆகியோர் 20 நிமிடம் ஏபிஜே உலக சாதனை படைத்தனர் மற்றும் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் ஹர்திக், அர்ச்சனா, தர்ஷன், பிரதிஷ், தனஸ்ரீ, அர்ஷித், அஸ்ரித், யோகேஸ்வரன், பவன் குமார், பரணிதரன், அகிலேஷ், பிருந்தா ஸ்ரீ, தர்ஷன், எழில், கபிலன், சுதர்சன் யாதவ் ,தர்ஷன் யாதவ் ,சாஸ்வந்த், சுஜன், ஓவியா,சத்திரிக் ரோசன் ஆகியோர் முதல் மூன்று இடம் பிடித்தனர்.

கோவை மாணவ, மாணவிகளை சிறப்பு விரு ந்தினராக பங்கேற்ற ஏபிஜே உலக சாதனை நிறுவனர் மற்றும் தலைவரான அஜித்குமார் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் சுகன்யா, முதன்மை பயிற்சியாளரான ப.செந்தில் குமார், உதவி பயிற்சியாளர் மதன்குமார் மற்றும் மனோஜ் குமார் பரிசளித்து பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img