கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியில் அழகு சாதனையால் உலக சாதனை நிகழ்வு வியாழக்கிழமை அன்று கல்லூரி கலை அரங்கில் நடைபெற்றது.
மயூரம் மேக் ஓவர் அகாடமி நடத்திய இந்நிகழ்வில் 30 நிமிடத்தில் பாரம்பரிய முறைப்படி அலங்காரம் நூற்றுக்கும் மேற்பட்ட அழகு கலை நிபுணர்களின் மூலம் செய் யப்பட்டது. இந்த உலக சாதனை நிகழ்வு உலக அதிசயங்களின் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. கல்லூரி செயலாளர் கே.சி.கருப்பணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும் மயூரம் மேக் ஓவர் அகாடமி-ன் தலைவர் கீர்த்தனா சாய்ராம், வேர் ல்ட் ஒன்டேர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட் இயக்குனர் மகேஸ்வரி கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கௌதம் கல்லூரியின் முதல்வர் ப. தங்கவேல், துணை முதல்வர் சு. பிர காசம் மேலாண்மை துறை தலைவர் எஸ் சத்திய சுந்தரி கலந்து கொண்டனர்.



