நாமக்கல் என்.புது ப்பட்டி தொன் போஸ்கோ அன்பு இல்லத்தில், கிராம குழந்தைகளுக்கான கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது.
கோடை காலத்தை குழந்தைகள் பயனுள்ள வகையில் செலவழிக்க ஏதுவாக, நாமக்கல் வட்டத்தைச் சேர்ந்த பீமநாயக்கனூர், வீரிப்பாளையம், என். புதுப்பட்டி, கணபதிநகர் மற்றும் மேலப்பட்டி கிராமத்தைச் சார்ந்த குழந்தைகளுக்கான கோ¬ டகால பயிற்சி முகாமானது, நாமக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொன் போஸ்கோ அன்பு இல்லத்தில் ஒரு வாரம் நடைபெற்றது.
இந்த பயிற்சியில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த பயிற்சி முகாமில் குழந்தைகளுக்கான உரிமைகள், காலநிலை மாற்றம், நீர் மேலாண்மை, தன் சுத்தம், சுகாதாரம் குறித்த சிறப்பு பயிற்சிகள் அவர்களுக்கு வழங்க ப்பட்டன. ஆடல், பாடல் மற்றும் விளையாட்டுகள் மூலம் வாழ்வியல் மதிப்பீடுகளும் கற்றுக் கொடுக்கப்பட்டன.
இந்த முகாம் பயிற்சியாளர்களாக கார்த்திகா, ஆல்வின் மற்றும் அப்துல்லா ஆகியோர் செயல்பட்டனர். கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழாவில், சிறப்பு அழைப்பாளராக அதிமுக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளரும், நாமக்கல் சாரா குரூப்ஸ் நிறுவனருமான ஸ்ரீ தேவி மோகன் கலந்து கொண்டு குழந்தைகள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றி தழ்களை வழங்கினார்.
விழாவின் இறுதியாக இந்த பயிற்சி வகுப்பில் பயனடைந்த சிறுமி பேசுகையில்….
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடந்தால் அரசு உதவி எண் 1098 ஐ அழைக்க வேண்டும் என்று உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை அந்த சிறுமி பகிர்ந்து கொண்டார்.
தொன்போஸ்கோ அன்பு இல்ல இயக்குநர் அருட்தந்தை பரத் ஜெயராஜ், முன்னாள் மாணவரும் நாமக்கல் எஸ்.எஸ்.அக்ரோ டெக் நிறுவனர் ரெக்ஸ் மற்றும் அன்பு இல்ல நிர்வாகிகள், ஊழியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.