சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த ஜோஹோ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜோஹோ நிறுவனத்தின் மனிதவள செயல்பாடுகளின் இணை இயக்குனர் சுஹைல், நாலேஜ் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பி.எஸ்.எஸ். சீனிவாசன் ஆகியோர் கையொப்பமிட்டனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் நாலேஜ் பொறியியல் கல்லூரியின் மேலாண்மை துறை மாணவர்கள் ஜோஹோ நிறுவனத்தின் ஹச் ஆர்எம் மற்றும் சிஏஎம் மென்பொருள்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வேலைவாய்ப்பு திறன்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தனர் தினேஷ் கண்ணா, ராமலிங்கம் உள்ளிட்டோர் பேசினர்.
இந்நிகழ்ச்சியில் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி அறக்கட்டளையின் நிறுவனர் கல்லூரியின் செயலாளர் குமார், பொருளாளர், சுரேஷ்குமார், துணை முதல்வர் முனைவர் விசாகவேல், வேலாண்மை துணை இயக்குனர் ஸ்டீபன் மற்றும் அனைத்து இயக்குநர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண் டனர்.