Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உலக தேங்காய் தின கருத்தரங்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உலக தேங்காய் தின கருத்தரங்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி J.K 365 தென்னை ஆராய்ச்சி மையம் மற்றும் அதியமான் வேளாண்மை கல்வி நிலையம் இணைந்து உலக தேங்காய் தினத்தினையொட்டி கருத்தரங்கம் நடத்தினர்.

இதில் விவசாயிகள், வேளாண் துறையினர், அதியமான் வேளாண்மை கல்வி மாணவர்கள் மற்றும் மேரிகோ நிறுவனத்தினர் பங்கேற்றனர். 

கருத்தரங்கில் வேளாண்மை விரிவாக்க இணை பேராசிரியர் முனைவர் ஜனனி வரவேற்று தென்னை சாகுபடியின் தற்போதைய நிலைபற்றியும் தென்னையில் அதிகமகசூல் பெறுவதற்கு விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை பற்றியும் எடுத்துரைத்தார். 

இதையடுத்து இதில் அரசம்பட்டி J.K365 தென்னை ஆராய்ச்சியாளர் தென்னஞ்செடி கென்னடி  பேசுகையில்,

இலங்கையில் நடந்த ஏபிசி மாநாட்டில், உலக தென்னை சாகுபடியிலும் தேங்காய் உற்பத்தியிலும் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. அதற்கு காரணம் தென்னை சாகுபடியில் விவசாயிகள் காட்டி வரும் அதீத ஆர்வமும், அவர்களுக்கு அதிக மகசூலை தரக்கூடிய ரகங்களை உற்பத்தி செய்து தரக்கூடிய வேளாண் ஆராய்ச்சிகளும் தான் ” என்றார்.

இவ்விழாவில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி, ரஜினி செல்வம் பொதுகுழு உறுப்பினர் அஸ்லாம், ஒன்றிய கவுன்சிலரும் நெசவாளர் அணி செயலாளர் அம்மன் ராஜா, மாணவர் அணி செயலாளர்ஜெயேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கீதா கோவிந்தசாமி, சன்முகானதம், சிவலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நிறைவில் தென்னை விவசாயி சாதிக் பாஷா நன்றியுரை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img