fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கம்

கிருஷ்ணகிரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாவட்ட அளவிலான எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் பற்றிய தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் எய்ட்ஸ் விழிப்பணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது. மேலும், அறிஞர் அண்ணா மற்றும் குன்சாக கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மனித சங்கிலி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி அண்ணா சிலை வரை நடைபெற்றது.

தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் ஆட்டோ ரிக்ஷாவில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், கிராமிய கலைக்குழுவினர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், மாவட்ட திட்ட மேலாளர் அருள், அரசு மருத்துக்கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவர் மது, கூட்டு மருந்து சிகிச்சை மருத்துவர் ஜகன், அரசு மருத்துவமனை மருத்துவர் சண்முகவேல், இரத்த வங்கி மருத்துவர் வசந்தகுமார், நம்பிக்கை மையம், சுகவாழ்வு மைய பணியாளர்கள், தன்னார்வு தொண்டு நிறுவனங்கள், இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பு, பாஸ்டிவ்

நெட்வொர்க் அமைப்பு உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img