அதுல்யா சீனியர் கேர் சார்பில் கோயம்புத்தூர் ரேஸ்கோர்ஸ் சாலையில் “முதியோரை கனிவுடன் பராமரித்தல்” என்ற பெயரில் வாக்கத்தான் நடைபெற்றது.
மூத்த குடிமக்களின் நலவாழ்வு மற்றும் கண்ணியத்தை வலியுறுத்திய இந்நிகழ்வில் 200க்கும் அதிகமான நபர்கள் மிக ஆர்வத்தோடு பங்கேற்றனர். இந்த வாக்கத்தான் நிகழ்வு காலை 6:00 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
இது முதியோர்கள் மீதான அக்கறை, கனிவு, ஒருமைப்பாடு மற்றும் சமூக உணர்வை ஆற்றலுடன் வெளிப்படுத்துவதாக அமைந்தது.
இந்நிகழ்வின் வெற்றி குறித்து அதுல்யா சீனியர் கேரின் நிறுவனர் ஸ்ரீனிவாசன் கூறுகையில்,
“இந்த வாக்கத்தான் வெற்றியாக அமைந்திருக்கிறது. முதியோர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் தனது முயற்சிகளை தொடர்வதில் அதுல்யா தன்னை மனமார அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது.
முதியோரை கனிவுடன் பராமரித்தல் என்ற இந்த வாக்கத்தான், முதியோர்களுக்கு ஆதரவையும் அவர்கள் மீதான விழிப்புணர்வையும் ஊக்குவிக்கிறது” என்றார்.



