நீலகிரி மாவட்டத்தில், தோட்டக்கலைத்துறை சார்பில் மானிய விலையில் லில்லியம் கொய்மலர் சாகுபடி செய்யப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டார்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பேரூராட்சி, நெடுகுளா கிராமம், கேர் கம்பை பகுதியில், தோட் டக்கலைத்துறை சார்பில் மானிய விலையில் லில்லியம் கொய்மலர் சாகுபடி செய்யப்பட்டு
வருகிறது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு செய்தியாளர் பயணத்தின் போது நேரில் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலன் கருதி, தோட்டக்கலைத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் நமது மாவட்டத்திலும், இயற்கை விவசாயத்திற்கு பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்து, தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், நமது மாவட்டத்தில் தேயிலை விவசாயம் அதிகபடியாக உள்ளதால், மானிய விலையில் தேயிலை அறுவடை இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், கேரட், பீட்ரூட், கிழங்கு போன்ற காய்கறிகள் சுத்தம் செய்ய ஏதுவாக தோட்டக்கலைத்துறை மூலம் ஒருங்கிணைந்த சிப் பம் கட்டும் அறை என்ற திட்டத்தின்கீழ், மானிய விலையில் காய்கறிகள் சுத்தம் செய்யும் இயந்தி ரங்கள் அமைக்கவும், விவசாயத்திற்கான பல் வேறு மானியங்களும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று கோத்தகிரி பேரூராட்சி, நெடுகுளா கிராமம், கேர்கம்பை பகுதியில் அருண்குமார் என்பவர் தேசிய தோட்டக்கலை வளர்ச்சி இயக் கத் திட்டத்தின் கீழ் 4,000 சதுர அடியில் பசுமைக்குடில் அமைத்து லில்லியம் கொய் மலர் சாகுபடி செய்து வருகிறார்.
மேலும், லில்லியம் நடவு பொருள் குமிழ்களை (Lilum Bulbs) ஹாலந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்து, -2 டிகிரி செல்சியஸ்ஸில் பராமரிக்க குளிரூட்டும் அறையும் (Pre Cooling Unit) அமைத்துள்ளார். இவர் ஆண்டு முழுவதும் லில்லியம் கொய்மலர் சாகுபடி செய்து பெங்களுருக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். மேலும் குளிரூட்டும் அறை அமைப்பதற்கு தோட்டக்கலைத்துறை மூலம் ரூ.8,75,000/- (ரூபாய் எட்டு லட்சத்து எழுபத்து ஐந்தாயிரம் மட்டும்) 35% மானியத்தொகையாக பெற்று சிறப்பான முறையில் சாகுபடி செய்து நல்ல லாபமும் ஈட்டி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பயணத்தின் போது, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, உதவி இயக்குநர் ஐஸ்வர்யா (கோத்தகிரி), வேளாண் விற்பனை மற்றும் வணி கத்துறை துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, கோத்தகிரி வட்டாட்சியர் இந்திரா, கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதர், விஜயா, விவசாயிகள் உட்பட பலர் உட னிருந்தனர்.



