fbpx
Homeபிற செய்திகள்உதகை மனவளக்கலை யோகா தவ மையத்தில் மனைவி நல வேட்பு விழா

உதகை மனவளக்கலை யோகா தவ மையத்தில் மனைவி நல வேட்பு விழா

உதகை மனவளக்கலை யோகா தவ மையத்தில் மனைவி நல வேட்பு விழா நடந்தது. மையத் தலைவர் முனைவர் தொ.சுகுமார் வரவேற்றுப் பேசினார். நிர்வாக அறங்காவலர் பி.ஜெயராமன், பேராசிரியர் அருள்நிதி வி.சத்திய மூர்த்தி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
குடும்பத்தில் வாழ்க்கை துணையின் மதிப்புணர்ந்து பெண்மையின் மாண்பினை போற்றும் வகையில் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் துணைவியார் மாண்புமிக்க லோகாம்பாள் பிறந்த நாளை மனைவி நல வேட்பு தினமாக உலகெங்கும் உள்ள மனவளக்கலை யோகா மையங்களில் ஆகஸ்ட் 30ம் நாள் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img