வீட்டுமனை பட்டா கோரி சுமார் 200 சலவை மற்றும் சவர தொழிலாளர்கள், குடும்பத்தினரோடு சென்று ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுங்காராவிடம் மனு அளித்தனர். அவர்கள் சார்பாக சவரத் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகம் நிர்வாகிகள் பச்சையப்பன் மற்றும் முத்துசாமி கூறியதாவது:
அந்தியூர் அடுத்த தவிட்டுப் பாளையம் பகுதியில் நூற்றுக் கணக்கான சவர மற்றும் சலவை தொழிலாளர்கள் குடும்பத் தினரும் பல ஆண்டுகள் வசித்து வருகின்றனர். கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பாக அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறை நிலத்தை கையகப்படுத்த உத்தரவிட்டது. இதன் அடிப்படை யில் அரசு நிலம் கையகப்படுத்த ஆணை பிறப்பித்ததும் அந்த நிலத்தில் சொந்தக்காரர்கள் உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றனர். இது சம்பந்தமாக 11 வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்த வழக்கு அனைத்தும் 2019ல் தள்ளுபடி செய்யப்பட்டன.
அதன் பிறகு நில உடைமையா ளர்கள் அரசிடம் நிலம் கையப் படுத்துவதற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்தனர். கடந்த மார்ச் 2024 இல் அரசால் அம்மனு தள்ளுபடி செய்யப் பட்டது. எனவே இந்த அரசு ஏழை எளிய மக்களுக்கு ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் வீட்டு மனைகளாக பிரித்து அப்பகுதி சவர மற்றும் சலவை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டுகிறோம்பலமுறை இது சம்பந்தமாக அரசிடம் நாங்கள் மனு அளித்துள்ளோம். அனைவரும் கூலி தொழிலாளர் கள் என்பதால் அரசு விரைந்து இது சம்பந்தமான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கி றோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.