fbpx
Homeபிற செய்திகள்நீலகிரியில் நகராட்சி உழவர் சந்தை மற்றும் காய்கறி வணிக வளாகத்தில் பராமரிப்பு பணிகள் ஆய்வு

நீலகிரியில் நகராட்சி உழவர் சந்தை மற்றும் காய்கறி வணிக வளாகத்தில் பராமரிப்பு பணிகள் ஆய்வு

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி உழவர் சந்தை மற்றும் காய்கறி வணிக வளாகத்தில் நடை பெற்று வரும் பராமரிப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர், உதகை நகராட்சி உழவர் சந்தை மற்றும் காய்கறி வணிக வளாகத்தில் உள்ள 500 மெ.டன் கொள்ளளவு கொண்ட பரிவர்த்தனைக் கூடத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை பார்வையிட்டு, நடை பெற்றுவரும் பணிகளை ஒரு மாதத்திற்குள் முடித்து விவசாயிகளின் பயன் பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்டார்.

கேரட் மற்றும் உருளை கிழங்கு ஆகியவற்றை நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம் (NCMS) மற்றும் நீலகிரி விற்பனைக்குழுவுடன் இணைந்து விளைபொருட்களை விற்றுத் தர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேளாண் வணிக துணை இயக்குநர் மற்றும் விற்பனைக்குழு செயலாளருக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தயாளன், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, நீலகிரி கூட்டுறவு துணை பதிவாளர் முத்துக்குமார், (NCMS) பொது மேலாளர் சான வாஸ், ஒழுங்குமுறை உதகை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img