தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் தங்க தமிழ்செல்வன் எம்.பி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பேரூராட்சிகள் துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகராட்சிகள், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தொழிலாளர் நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ஒன்றிய மற்றும் மாநில அரசின் நிதியின் கீழ்துறைரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.
இதில் தங்க தமிழ்செல்வன் எம்.பி பேசுகையில், “மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம், ஒன்றிய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், மாநில அரசு டன் இணைந்து எவ்வாறு செயல்படுத்தப் பட்டு வருகிறது என்பதனை கண் காணித்து, அத்திட்ட பணிகளை விரைந்து முடிக்கப்பட்டு, பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளும் பொருட்டு நடத்தப் படுகிறது.
எனவே, அனைத்துத்துறை அலுவலர்களும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் திட்டங் கள் பொதுமக்களிடையே சென்றடை வதை உறுதி செய்ய வேண்டும். மக்கள் நலனை கருத்தில் கொண்டு, அலுவலர்கள் பணியாற்றிட வேண் டும்“ என்றார்.
இதனைத் தொடர்ந்து, மாற்றுத்திற னாளிகளின் இல்லத்திற்கே சென்று நலத்திட்டங்கள் வழங்கும் தமிழ் நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் கணக்கெடுக்கும் பணியை மேற் கொள்ள 3 சமுதாய வழிநடத்துபர்கள் மற்றும் 7 சமுதாய மறுவாழ்வு பணியாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை தேனி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள்.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ.1,01,800/- மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட் ரோல் ஸ்கூட்டர் 29 மாற்றுத்திறனாளி களுக்கும் ரூ.1,18,500/- மதிப்பிலான ஸ்பைனல் டைப் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 1 மாற்றுத்திறனாளிக்கும் என மொத்தம் 30 மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.30,70,700/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவபிரசாத், மாவட்ட வருவாய் அலுவலர் ஐ.மகாலட்சுமி, பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன், உதவி காவல் கண்காணிப்பாளர் கேல்கர் சுப்பிரமணி பாலசந்திரா ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கு நர் அபிதா ஹனீப், பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன், உத்த மபாளையம் வருவாய் கோட் டாட்சியர் செய்யது முகமது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (பொது) முத்துமாதவன், செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தரேசன், நகர்மன்றத் தலைவர்கள் ரேணுபிரியா பால முருகன் (தேனி-அல்லிநகரம்), வனிதா நெப்போலியன் (கம்பம்), ராஜரா ஜேஸ்வரி சங்கர் (போடி நாயக்கனூர்), பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



