பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல்லில் இன்று (7ம் தேதி) நடைபெற்ற சிறப்புத் தொழு கையில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கலந்துகொண்டு, சிறப்பு தொழுகை நடத்தினர்.
நாமக்கல் அஞ்சுமனே இஸ்லாமிய ஜாமியா மஸ்ஜித் சார்பில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் பேட்டை பள்ளிவாசலில் இருந்து, முத்தவல்லி தவுலத் கான் தலைமையில் திரளான முஸ்லீம்கள் ஊர்வலமாக புறப்பட்டு, சேலம் சாலை, எம்ஜிஎம் திரையரங்கம் எதிரே உள்ள ஈத்கா மைதா னத்தை சென்றடைந்தனர்.
அங்கு பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ஜாமியா பள்ளி வாசல் இமாம் சாதிக்பாஷா, சிறப்பு தொழுகையை நடத்தினார். இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகை நடத்தினர். முன்னதாக பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. தொழுகை முடிந்த பின்பு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். சிறுவர்கள் உள்ளிட்ட பலரும் புத் தாடை அணிந்து உற்சா கத்துடன் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். பின்னர் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை வழங் கினார்கள்.
உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பிரியாணி வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இதேபோல, நாமக்கல் கோட்டை, மாருதிநகர், மாந கராட்சி அலுவலகம் எதிரே உள்ள திடல், பரமத்தி-வேலூர், திருச்செங்கோடு, இராசிபுரம் உள்ளிட்ட பல்வேறு மசூதிகளில், பக்ரீத் சிறப்புத் தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லா மியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.



