fbpx
Homeபிற செய்திகள்கேபிஆர் கல்லூரியில் இறகுப்பந்து போட்டி

கேபிஆர் கல்லூரியில் இறகுப்பந்து போட்டி

கோவை அரசூரில் உள்ள கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கேபிஆர் டிராபியின் ஒரு பகுதியாக கேபிஆர் இறகுப்பந்து போட்டி
கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்லூரியின் உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களின் 65 பள்ளிகளிலிருந்தும், 15 இறகுப்பந்து பயிற்சி அகாடமியிலிருந்தும் சுமார் 150க்கும் மேற்பட்ட இளம் வீரர் வீராங்கனைகள் 11, 13, 15, மற்றும் 17 வயதிற்கு உட்பட் டோருக்கான பிரிவுகளில் பங்கேற்றனர்.

இதில் சிறப்பு விருந்தினர்களான ஜெர்மானிய பேராசிரியர் முனைவர் தாமஸ் கரோலஸ் மற்றும் மதுரை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் சிவா ஆகியோர்
வெற்றிபெற்ற மாணவர்களை ஊக்குவித்து பதக்கங்களையும் சான்றி தழ்களையும் வழங்கினர்.

இளம் தலைமுறையினரிடையே விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக கேபிஆர் டிராபி 2024ல் பல்வேறு குழு மற்றும் தனி விளையாட்டுகள் ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடை பெறவுள்ளதாக கல்லூரியின் முதல்வர் முனைவர் சரவணன் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img