கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 82 இலட்சம் மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள பூங்காவினை மாநகராட்சி ஆணை யாளர் திறந்து வைத்தார்.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்-23 பி.எம்.ஆர்.லே. அவுட் பகுதியில் 82 இலட்சம் மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் (விஜயலட்சுமி ராமகிருஷ்ணன் அறக்கட்டளை) அமைக்கப்பட்ட பூங்காவினை துணை மேயர் வெற்றிச்செல்வன் முன்னிலையில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய மண்ட லத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகை யில் பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பி.எம்.ஆர் லே-அவுட் பகுதியில் விஜயலட்சுமி ராமகிருஷ்ணன் அறக்கட்டளையின் சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் முழு பங்களிப்புடன் சிறுவர் பூங்கா மற்றும் பல்லுயிர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இப்பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சோலார் மின் விளக்குகள் குடிநீர் வசதி, ஓய்வு அறை, சொட்டுநீர் பாசன வசதி மற்றும் நடைபாதை உள்ளிட்டவை உள்ளன.