fbpx
Homeபிற செய்திகள்வேலூர் நறுவீ மருத்துவமனை நிறுவனர் ஜி.வி.சம்பத் பிறந்தநாள் விழா

வேலூர் நறுவீ மருத்துவமனை நிறுவனர் ஜி.வி.சம்பத் பிறந்தநாள் விழா

வேலூர் நறுவீ மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவர் ஜி.வி.சம்பத் பிறந்தநாளையொட்டி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

ஏழை குடும்பத்தினர் 50 பேருக்கு ஒரு மாதத்துக்கான மளிகை பொருட்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 27 பேருக்கு கல்வி உதவித்தொகை, அன்ன தானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஜி.வி.சம்பத் வழங்கினார்.

மேலும், நறுவீ மருத்துவமனையில் ஊழியர்கள், நண்பர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ரத்த தானம் செய்தனர். பிறந்த நாள் நிகழ்ச்சியில் மருத்துவமனை மருத் துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் முன்னிலையில் மருத்துவமனை நிறுவனர் ஜி.வி.சம்பத் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து ஏராளமானோருக்கு அன்னதானம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 27 பேருக்கு கல்வி உதவித்தொகையை ஜி.வி.சம்பத் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img