fbpx
Homeபிற செய்திகள்கட்டுமானப் பொருட்களின் தரப் பரிசோதனை மையம் திறப்பு

கட்டுமானப் பொருட்களின் தரப் பரிசோதனை மையம் திறப்பு

தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் NABL தரச்சான்று பெற்ற கட்டுமானப் பொருட்களின் தரப் பரிசோதனை மையத்தின் திறப்பு விழா நேற்று (8ம் தேதி) சேலம், ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா, சோனா கல்விக் குழுமத்தின் தலைவர் சொ.வள்ளியப்பா, துணைத் தலைவர்கள் .சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா மற்றும் கல்லூரியின் முதல்வரும், கட்டுமானப் பொருட்களின் தரப் பரிசோதனை மையத்தின் தலைமை ஆலோசகருமான கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்.

விழாவின் தலைமை விருந்தினரான சேலம், ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா பேசுகையில், ஏற்கனவே கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் புதிதாக கட்டப்படுகின்ற கட்டிடங்களின் தூண்கள், விட்டங்கள், அடுக்குகள் மற் றும் கான்கிரீட் ஆகியவற்றின் வலிமை மற்றும் அதனுள்ளே இருக்கக்கூடிய இரும்புக்கம்பிகளின் தரம் ஆகியவற்றை, அக்கட்டிடத்தினை இடிக்காமலே NDT டெஸ்ட் மூலமாக பரிசோதனை செய்து தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார்.

மேலும், இத்தரப் பரிசோதனை மையத்தின் சேவைகளை தெற்கு ரயில்வே துறையும் பயன்படுத்தி வருகின்றது என்றும் தெரிவித்தார்.

இக்கல்லூரியின் தலைவர் சொ.வள்ளியப்பா தமது உரையில், கட் டுமானப் பொருட்களின் வலிமை மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு கட்டுமானப் பொருட்களின் தரப் பரிசோதனை மையம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றும், புதிய கட்டுமானப் பொருட்கள் மற்றும் மேம்பட்ட கட்டுமானத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் குறைந்த செலவில் மிகச் சிறப்பாக கட்டிடங்களை உருவாக்க முடியும் என்றும் கூறினார்.

இக்கட்டுமானப் பொருட்களின் தரப் பரிசோதனை மையத்தின் திறப்பு விழாவிற்கு, TPT-யின் கட்டிடவியல் துறைத்தலைவர் லோகநாதன், கட்டிட வல்லுநர்கள், கட்டிட பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள், TPT-யின் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img