கோவை டாடாபாத்தில் உள்ள தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் மண்டல அலுவலகத்தில், கள உதவியாளர் பணியிடத்திற்கான உடற்தகுதித் தேர்வு நேற்று தொடங்கியது. ஐடிஐ மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்களுக்காக நடைபெறும் இந்த உடற்தகுதித் தேர்வு, தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற உள்ளது.