நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்றங்கரையோரம் முருகன் கோவில் பகுதியில் சட்டவிரோதமாக பணம் சூதாட்டம் நடைபெறுவதாக பள்ளிபாளையம் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, பள்ளி பாளையம் டி.எஸ்.பி கௌதமன் மற்றும் பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் தலைமையில் காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அடர்ந்த புதர் மற்றும் ஆற்றங்கரை பகுதி என்பதால், குற்றவாளிகளைக் கண்டறிய காவல் துறையினர் ட்ரோன் கேமரா உதவியுடன் வான்வழி கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, முருகன் கோவில் காவிரி கரையோர அடர்ந்த புதர் மறைவில் 20-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடி சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது ட்ரோன் கேமரா காட்சியில் தெளிவாகச் சிக்கியது.

திடீரெனத் தங்கள் தலைக்கு மேலே ட்ரோன் கேமரா பறப்பதைக் கண்ட சூதாட்டக் கும்பல் பேரதிர்ச் சியடைந்தது. காவல் துறையினர் வந்துவிட்டதை உணர்ந்த அவர்கள், அலறியடித் துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் ஒரு நபர், ட்ரோனிடமிருந்து தப்பிக்க வேறு வழியின்றி ஆற்றங்கரை யோரம் இருந்த சாக்கடையில் குதித்து தப்பியோட முயன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இருப்பினும், உஷாரான காவல் துறையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டோரைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட வர்களைப் பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்குப் பயன்படுத்திய ரூ.10,000 ரொக்கப் பணத்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
ட்ரோன் கேமராவைப் பார்த்து சூதாட்டக் கும்பல் அலறியடித்து ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



