fbpx
Homeபிற செய்திகள்அங்கன்வாடி கட்டிடப்பணியை துவக்கி வைத்த மார்கண்டேயன் எம்.எல்.ஏ

அங்கன்வாடி கட்டிடப்பணியை துவக்கி வைத்த மார்கண்டேயன் எம்.எல்.ஏ

எட்டையாபுரம் பேரூராட்சி 11- வது வார்டில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.12-லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்படுகிறது. இந்தப் பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்தார்.

நிகழ்வில் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், எட்டையாபுரம் பேரூர் கழக செயலாளர் பாரதிகணேசன், பேரூராட்சி துணைத் தலைவர் கதிர்வேல், தூத்துக்குடி மடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முனியசாமி, எட்டையபுரம் மில் முன்னாள் சேர்மன் ஆழ்வார் உதயகுமார், பேரூர் கழக அவைத்தலைவர் டி.ஆர்.எஸ் ராமச்சந்திரன், ஒன்றிய துணைச் செயலாளர் வெள்ளைத்துரை, பேரூர் கழக துணைச் செயலாளர் மாரியப்பன் வார்டு உறுப்பினர் மணிகண்டன் வார்டு செயலாளர்கள் பிச்சை, பட்சிராஜன், சின்னப்பர், அருள்சுந்தர் தலைமை கழக பேச்சாளர் தமிழ் பிரியன் மகளிர் அணி மஞ்ச மாதாதேவி, முருகலட்சுமி, கழக நிர்வாகிகள் கணேசன், செல்வம், மாரிமுத்து பாண்டியன் இளைஞரணி பரமசிவம், சூர்யா விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img