பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் யுனைடெட் கல்விக் குழுமங்களில் அங்கமான யுனைடெட் காலேஜ் ஆஃப் பார்மசி கல்லூரியில் மாநில அளவிலான இரண்டாம் ஆண்டு பார்மசி கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 45 உறுப்பு கல்லூரிகள் இந்த போட்டியில் பங்கேற்று உள்ளன. 2100 விளை யாட்டு வீரர்கள் இந்த போட்டியில் பங்கு பெற்றனர்.
பெண்களுக்கான திரோபால், கோகோ, டெனிகாய்ட் ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆண்களுக்கான கபடி,கால்பந்து மற்றும் வாலிபால் போட்டிகள் நடைபெற்றன. கிரிக்கெட் போட்டி கல்லூரி மைதானத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
போட்டிகளின் முடிவுகள்:
திரோபால் போட்டியில் ஈரோடு வெள்ளாளர் பார்மசி கல்லூரியை வீழ்த்தி, கேஎம்சி அணி வெற்றிவாகை சூடியது. கோகோ போட்டியில் கேஎம்சிஎச் கல்லூரியை எளிதில் வென்றது எஸ். என்.எஸ் கல்லூரி.
டெனிகாய்ட் ஒற்றைய பிரிவில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மதர் தெரசா கல்லூரியும், திருப்பத்தூர் ஜிபி கல்லூரியும் மோதின… இதில் மதர் தெரசா கல்லூரி முதல் இடத்தை பெற்றது.
இரட்டையர் பிரிவில் ஈரோடு நந்தா கல்லூரியை எளிதில் வென்றது கோவை கே எம் சி கல்லூரி. ஆண்களுக்கான வாலிபால் போட்டியில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேர்ந்த ஜே கே கே நடராஜா பார்மசி கல்லூரி பெரம்பலூர் தந்தை ரோவர் பார்மசி கல்லூரியை வென்றது.
கபடி போட்டியில் பண்ணை பார்மசி கல்லூரி தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் கலாம் பார்மசி கல்லூரியை வென்றது. கால்பந்து போட்டியில் சென்னையைச் சேர்ந்த சி எல் பெய்டு பார்மசி கல்லூரியை 5-&0 என்ற கோல் கணக்கில் யுனைடெட் பார்மசி கல்லூரி வெற்றி பெற்றது.
முன்னதாக இந்தப் போட்டியை கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் சண்முகம் துவக்கி வைத்தார்.
.
ஏழு போட்டிகள் முடிவடைந்த நிலையில் 25 புள்ளிகள் உடன் முதலிடத்தை கேஎம்சிஎச் அணி பெற்று இரண்டாவது முறையாக மாநில அளவிலான யுனைடெட் பார்மா டிராபியின் ஒட்டுமொத்த சாம்பியன்ஸ் பட்டத்தை தட்டிச் சென்றது.