fbpx
Homeபிற செய்திகள்ப்ரண்ட்லைன் பள்ளி குழுமம் நிகழ்த்திய 50 உலக சாதனைகள்

ப்ரண்ட்லைன் பள்ளி குழுமம் நிகழ்த்திய 50 உலக சாதனைகள்

25ம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஃப்ரண்ட்லைன் பள்ளி குழுமங்களின் சார்பில் 50 உலக சாதனை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 20ம் தேதி தொடங்கிய நிகழ்ச்சிகள் வரும் 30ம் தேதி வரை வரை நடைபெற உள்ளது.

இதில் 1,212 மாணவ மாணவிகள் தனித்தனியாக தாங்கள் படித்தப் புத்தகத்தை பகுத்தாய்வு செய்கின்றனர். இந்த நிகழ்வு 66 மணி தேரம் தொடர்ந்து நடைபெறுகிறது.

நிகழ்ச்சியை திருப்பூர் மாநகரமேயர் தினேஷ் குமார் துவக்கிவைத்தார். தேசிய ஒற்றுமையை வெளிக்கொணரும் விதமாக பள்ளியின் 1,540 குழந்தைகள் தங்களுடைய கையில் இந்திய தேசியக் கொடிகளை ஏந்திக் கொண்டு விளையாட்டுப் பயிற் சிகளை மேற்கொண்டு ஒரு புதிய உலக சாதனையைப் படைத்தனர்.

அதே குழந்தைகள் தங்களுடைய கைகளில் காகித பாம்களை வைத்து விளையாட்டுப் பயிற்சி மூலம் உலக சாதனை செய்தனர். அடுத்தாக ஃப்ரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவி தன்யாஸ்ரீ 22,000க்கும் அதிகமான ஐஸ்குச்சிகளைக் கொண்டு 20 சதுர மீட்டரில் ஓவியத்தினை வரைந்துள்ளார்.

ஒன்பதாம் வகுப்பு மாணவி மானசா நாகஸ்ரீ 1500க்கும் அதிகமான ஆரிகாமி காகித இதயங்களைக் கொண்டு 30,3 சதுர மீட்டர் அளவிளான தேசியக் கொடியை வடிவமைத்தார்.

தி ஃப்ரண்ட்லைன் அகாடமி பள்ளியின் 4 ஆம் வகுப்பு மாணவன் ஆர்.நருண்பிரகாஷ், 24 சதுர மீட்டரில் 12000 த்திற்க்கும் அதிகமான ஆரிகாமி காகித மாடல்களை ஒட்டி சாதனை படைத்தார். அடுத்து 2213 மாணவ மாணவிகள் 225 சதுர மீட்டரில் 75000 க்கும் அதிகமான ஆரிகாமி வடிவங்களை ஒட்டி ஒரு புதிய உலக சாதனையைப் படைத்தனர்.

மேற்கண்ட சாதனைகளுக்கான அங்கீகாரத்தை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய 4 நிறுவனங்கள் அவர்களுக்கு வழங்கி கௌரவித்தன.

படிக்க வேண்டும்

spot_img