fbpx
Homeபிற செய்திகள்டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 ப்ரீஸ்டைல் பைக் அறிமுகம்

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 ப்ரீஸ்டைல் பைக் அறிமுகம்

உலக அளவில் புகழ்பெற்ற டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் புத்தம் புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 ஃப்ரீஸ்டைல் பைக்கை தமிழ்நாட்டில் கோவையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இருசக்கர வாகனப் பிரியர்களின் உற்சாகத்தை முற்றிலும் மாற்றியமைக்கும் நிபுணத்துவத்துடன், ஸ்போர்ட்ஸ் பைக் பிரியர்களை ஈர்க்கும் வகையில் இந்த பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தனித்துவமான வடிவமைப்பு, என்ஜின் தகவமைப்பு, வெப்ப கட்டுப்பாடு, உள்ளிட்ட பல்வேறு மாறுபட்ட தொழில்நுட்பங்களை கொண்டதாக டிவிஎஸ் அப் பாச்சி ஆர்டிஆர் 310 ஃப்ரீஸ்டைல் பைக் திகழ்கிறது.

அறிமுக நிகழ்ச்சியில் டிவிஎஸ் மோட்டார் நிறுவன பிரீமியம் பிரிவு வர்த்தக தலைவர் விமல் கம்ப்ளி கூறுகையில், ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர், சைபோர்க் தொழில்நுட்பம், நொடிப்பொழுதில் முடுக்கும் ஆற்றல், சாலையில் உத்வேகத்துடன் பயணிக்கும் சுறுசுறுப்பு, உற்சாகத்தை பைக் பிரியர்களுக்கு டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 ஃப்ரீஸ்டைல் பைக் தரக்கூடியது’ என்றார்.

க்ரூல்ஸ் கன்ட்ரோல், டைனமிக் பிரேக் லேம்ப், புத்தம் புதிய சூப்பர் மோட்டோ மோட் உள்பட 5 ரைட் மோடுகள், கோ புரோ கன்ட்ரோலுடன் கூடிய டிஎப்டி கிளஸ்டர், மியூசிக் கன்ட்ரோல், வாய்ஸ் அசிஸ்ட், ஸ்மார்ட் ஹெல்மட் டிவைஸ் கனெக் டிவிட்டி, டெலிபோனி மற்றும் நேவிகேஷன் ஆகிய தொழில்நுட்ப அம்சங்கள் இந்த பைக்கில் உள்ளன. இந்த பைக் 3 ரகங்களில் ரூ.2,42,990 முதல் ரூ. 2,63,990 வரையிலான விலைகளில் கிடைக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img