தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தூத்துக்குடி தலைமை அலுவலகத்தில் 78வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. பொது மேலாளர் (கடன்) எஸ்.நாராயணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கூடியிருந்த அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தி தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி பொது மேலாளர்கள், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் வங்கியின் அனைத்து பங்குதாரர்களுக்கும் தங்கள் சுதந்திர தின வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் முதன்மை நிதி அலுவலர், பொது மேலாளர்கள், துணை பொது மேலாளர்கள் மற்றும் உதவி பொது மேலாளர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.