fbpx
Homeபிற செய்திகள்கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் புனித பரலோக மாதா பசிலிக்கா ஆலயத்தில் விண்ணேற்பு பெருவிழா

கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் புனித பரலோக மாதா பசிலிக்கா ஆலயத்தில் விண்ணேற்பு பெருவிழா

கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித பரலோக மாதா பசிலிக்கா ஆலயத்தில் ஆண்டுதோறும் விண்ணேற்பு பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக் கான பெருவிழா கடந்த 6-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட் களில் தினமும் மறையுரை சிந்தனை, நற்செய்தி வழங்கப்பட்டது.

கடந்த 18-ம்தேதி மரியன்னை மாதாடு நிகழ்ச்சி, 11-ம்தேதி புதுநன்மை விழா, 10ம்தேதி அன்பியங்கள் மற் றும் மாதா நற்பணி மன்ற இளைஞர்கள்,மாதா சபையினர் சார்பில் சிறப்பு மறையுரை சிந்தனை மற்றும் நற்செய்தி வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை 6.20 மணிக்கு ஆடம்பர் கூட்டு திருப்பலி நடைபெற்றது.

நேற்று முக்கிய விழாவான தேரடி திருப்பலி நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 2 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் தேரடிதிருப்பலி நடந்தது.

மாலை 6.30மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேர்களில் பரலோக மாதா மற்றும் ஆரோக்கிய மாதா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலயத்தில் இருந்து புறப்பட்ட தேர் பவனி முக்கிய வீதிகளின் வழி யாக சென்று நிலையை வந்தடைந்தது.

தொடர்ந்து விரதமிருந்தவர்கள் ஆலயத்தை சுற்றிகும்பிடு சேவை செய்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பகல் 12 மவணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலியும், 2 மணிக்கு மலையானத்தில் திருப்பலி யும், மாலை 4 மணிக்கு இந்தி யில் திருப்பலியும், இரவு 7 மணிக்கு திருப்பலி மற்றும் நற்கருணை பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது

படிக்க வேண்டும்

spot_img