fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கட்டித்தந்த மாப்பிள்ளையூரணி பள்ளி கட்டிடம் திறப்பு

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கட்டித்தந்த மாப்பிள்ளையூரணி பள்ளி கட்டிடம் திறப்பு

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி காமராஜர் மெட்ரி குலேஷன் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.


தூத்துக்குடியை தலை மையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் சார்பில், மாப்பிள்ளையூரணி காமராஜர் மெட்ரி குலேஷன் உயர்நிலைப் பள்ளியில் ரூ.30 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.


இதன் திறப்பு விழாவில் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சலீ.எஸ்.நாயர், துணைத் தலைவர் அசோக் குமார், மாவட்ட கல்வி அலுவலர் சிதம்பரநாதன், அகரம் பெயிண்ட்ஸ் சி.இ.ஓ. பரமகுரு ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைவர் மாரியப்பன், பொருளாளர் நரேன் தர்மராஜ், செயலாளர் தர்மராஜ், நிர்வாக குழு உறுப்பினர்கள், தலைமை யாசிரியர் மற்றும் ஆசிரி யர்கள் ஆகியோர் சிறப் பாக செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img