ஆம்வே இந்தியா நிறுவனம், உகந்த வைட்டமின் டி அளவைப் பராமரித்து எலும்பு மற்றும் நோயெதிர்ப்பு ஆரோக்கியத்துக்கு உதவும் மூலப்பொருட்களைக் கொண்ட நியூட்ரிலைட் வைட்டமின் டி பிளஸ் போரான் என்ற அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்ட செய்முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அறிமுக நிகழ்ச்சியில் பேசிய ஆம்வே இந்தியாவின் நிர்வாக இயக்குநர். ரஜ்னீஷ் சோப்ரா கூறுகையில்“இன்றைய வேகமான உலகில் மாறிவரும் வாழ்க்கை முறைகளினாலும், உடலுக்குத் தேவையான சூரிய ஒளி குறைவாகக் கிடைப்பதனாலும் இந்தியா முழுவதும் வைட்டமின் டி குறைபாடு என்பது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. சுமார் 80-90% இந்தியர்களுக்கு வைட்டமின் டி போதுமான அளவுக்கு இல்லை என்றும் இது காலப்போக்கில் எலும்புகளையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கும் என்றும் ஆய்வுகள் தொடர்ந்து எடுத்துக்காட்டுகின்றன.
இந்த அவசரத் தேவையைப் புரிந்துகொண்டு மக்கள் தங்கள் நல்வாழ்வு இலக்குகளை அடைய உதவும் வகையில் ஆம்வே அறிவியலை அடிப்படையாகக் கொண்ட ஊட்டச்சத்து பிரிவை வலிமைப்படுத்துவதோடு புத்தாக்கங்களை துரிதப்படுத்தியும் உத்திசார்ந்த வழிமுறைகளில் கவனம் செலுத்தியும் வருகிறது. அதன் ஒரு பகுதியாக உறுதியான எலும்புகளையும் முழுமையான ஆரோக்கியத்தையும் ஆதரிக்கும் மூலப்பொருட்களால் உருவாக்கப்பட்ட எங்கள் புதிய படைப்பான நியூட்ரிலைட் வைட்டமின் டி பிளஸ் போரோனை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமைப் படுகிறோம், என்றார்.
இந்த ஆற்றல் வாய்ந்த செய்முறையைப் பற்றி ஆம்வே இந்தியாவின் தலைமை மார்க்கட்டிங் அதிகாரியான அம்ரிதா அஸ்ரானி விளக்கினார்.



