fbpx
Homeபிற செய்திகள்தேனியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

தேனியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

தேனியில் நேற்று வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை பெரியகுளம் சப் கலெக்டர் ரஜத் பீடன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இதில் மகளிர் திட்ட இயக்குனர் சந்திரா, மகளிர் திட்ட உதவி இயக்குனர் டென்னிஸ் அன்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த பேரணி தேனி பழைய பேருந்து நிலையத்தில் ஆரம்பித்து மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் முடிவுற்றது. வரும் வழியில் மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு கோஷங்கள் மற்றும் பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.

தேனி விளையாட்டு விடுதி மாணவர்கள் 80 பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வை பயிற்சியாளர்கள் ராஜேஷ், பாண்டீஸ்வரர், முனிஸ்வரர் விக்னேஸ்வரன் மற்றும் ரமேஷ், ராயர் கோபி ஆகியோர் முன்னின்று நடத்திவைத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img