தூத்துக்குடி மத்திய அரசு ஊழியர் குடியிருப்பில் அமைந்துள்ள ஸ்ரீகாமாஷி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் தின விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில், தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் பாலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்வியின் முக்கியத்துவம் பற்றி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சிறப்புரை ஆற்றினார்.
பள்ளி செயலாளர் சி.அருணாசலம் வரவேற்புரையாற்றினார். அவரது துணைவியார் லெட்சுமி அருணாச்சலம் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். தூத்துக்குடி ரோட்டரி சங்கம் சார்பில், முன்னாள் உதவி ஆளுநர் ராதாகிருஷ்ணன் , ஸ்பிக் ரோட்டரி சங்கத்தின் தலைவர் பால சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் முதல்வர் கு.மீனாகுமாரி ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.
கடந்த கல்வி ஆண்டின் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகளை சிறப்பு விருந்தினர் வழங்கி பாராட்டினார். பள்ளியின் 5 ஆண்டு பணியினை நிறைவு செய்த ஆசிரியை சோபியா , பார்வதி பிரியா, முத்துசெல்வி ஆகியோருக்கும், 10 ஆண்டுகள் நிறைவு செய்த ஆசிரியை வனிதா தேவி, ஆனந்தி மற்றும் ரேணுகா தேவி ஆகியோருக்கும், 15 ஆண்டுகள் நிறைவு செய்த ஆசிரியை கோமதி மற்றும் 25 ஆண்டுகள் கல்வி பணியை சிறப்பாக நிறைவு செய்த பள்ளி துணை முதல்வர் சுப்புலெட்சுமிக்கும் , 30 ஆண்டுகள் கல்வி பணியை சிறப்பாக நிறைவு செய்த பள்ளி ஆசிரியை ராஜலெட்சுமி, மற்றும் அலுவலக கணக்காளர் புஷ்பகலா ஆகியோருக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதம் மற்றும் அறிவியலில் 100 மதிப்பெண்கள் பெற வைத்தமைக்காக ஆசிரியை வள்ளியம்மாள், வசந்தி மற்றும் ராதிகா ஆகியோருக்கும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிப்பொறியியல் மற்றும் கணிப்பொறி பயன்பாட்டில் 100 மதிப்பெண்கள் பெற வைத்தமைக்காக ஆசிரியை வனிதா தேவி, பார்வதி பிரியா ஆகியோருக்கும் ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது.
`சிறந்த ஊக்குவிப்பாளர் விருது’ என்ற விருது ஆசிரியை வனஜாவுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவாக பள்ளி துணை முதல்வர் ஜா.க.சுப்பு லட்சுமி நன்றி கூறினார்.
தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியரின் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியை ஆங்கில ஆசிரியை ஆனந்தி தொகுத்து வழங்கினார்.



