கோவை சக்தி பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் சார்பில் சக்தி லாக்கர்சின் புதுப்பிக்கப்பட்ட நஞ்சுண்டாபுரம் கிளை விரிவாக்கத்துடன் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது
புதிய கிளையை சக்தி பைனான்ஸ் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம். பாலசுப்ரமணியம் துவக்கி வைத்தார்.
இதுகுறித்து சக்தி பைனான்ஸ் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம். பாலசுப்பிரமணியம், செயல் இயக்குனர் செல்வி சுருதி பாலசுப்ரமணியம் ஆகியோர் கூறியதாவது:-
கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் அதிக மதிப்புமிக்க பொருட்கள், தங்க நகைகளை வாங்குகின்றனர். இவற்றை பாதுகாக்க சரியான தீர்வுகளையும், எளிதாக கையாளவும் சிறப்பான இருப்பிடங்களை தேடுகின்றனர். இந்த தேவையை நிறைவு செய்ய விரிவாக்க நடவடிக்கைகளை சக்தி பைனான்ஸ் சேவை நிறுவனம் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னை, பெங்களுரு மற்றும் தமிழ்நாட்டில் மாவட்ட தலைநகரங்களில் லாக்கர் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். கோவை ரேஸ்கோர்சில் சுவஸ்யா என்ற அதிக வசதிகள் கொண்ட லாக்கர் சேவையை அறிமுகம் செய்துள்ளோம்.
தேவையை பொறுத்து இந்த வசதிகளை பிற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம். மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்