fbpx
Homeபிற செய்திகள்சாலைகளுக்கு தமிழ் பெயரை சூட்ட கிராமசபை கூட்டத்தில் வலியுறுத்தல்

சாலைகளுக்கு தமிழ் பெயரை சூட்ட கிராமசபை கூட்டத்தில் வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி கிரா மசபை கூட்டம் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது.

77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி சிறப்பு கிராமசபை கூட்டம் கணே சபுரம் அங்கன்வாடி மையம் அருகில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது.

ஊராட்சிக்குட்பட்ட சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பலர் சாலை வசதி, சீரான குடிநீர், மின்விளக்கு, போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை முன்வைத்தனர். அப்பகுதியில் சிறார்கள் தவறான வழியில் போதையை உட்கொள் கின்றனர். அதை காவல்துறை தடுக்க வேண்டும்.

தாளமுத்துநகர் பிரதான சாலையை சிலர் ஒவ் வொரு தலைவர்கள் பெயரில் ஜாதி வாரியாக பிரிப்பதை தடுத்து நல்ல தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பேசுகை யில், இந்த ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பகுதிகள் முன்பு எப்படி இருந்தன, இப்போது எப்படி இருக்கின்றன என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும்.

நான் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீனவர் நலன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி பல்வேறு வளர்ச்சிப்பணிகளை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறேன்.

சில பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை, சாலை வசதி, மின்விளக்கு வசதி இல்லாத நிலை இருப்பதை அறிவேன். இனிவரும் காலங்களில் முழுமையாக அனைத்து குறைகளையும் தீர்க்கப்பட்டு, இந்த மாவட்டத்தில் சிறந்த ஊராட் சியாக விளங்குவதற்கு எனது பணி தொடரும். நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பேசினார். பின்னர் பசுமையை உருவாக்கும் வகையில் மரக்கன்றுகள் நட்டினார்.

கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல் 2023 24ம் ஆண்டு எடுக்கப்பட்ட பணிகள் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதிசெய்வது, இணைய வழி மனைப்பிரிவு கட்டிட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஜல்ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ் வாதர இயக்கம், என்னுடைய தாய்மண் என்னுடைய தேசம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் 526 புதிய குடியிருப்புகளை மாப்பிள்ளையூரணி ஊராட்சிப் பகுதிக்கு ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட 75 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

கூட்டத்தில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் மகேஸ்வரி, வேளாண்மை உதவி அலுவலர் கபில்ராஜ், மாப்பிள் ளையூரணி சுகாதார ஆய் வாளர் கள் பிரதீப்குமார், முகமது ஆசிக் அரபி, கிராம நிர்வாக அலு வலர் அமலநாதன், நெடுஞ்சாலைதுறை சாலை ஆய்வாளர் காஜா ஹுசைன் அகமது, தூத்துக்குடி அரசு போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் ஜெகதீசன், தொமுச மரியதாஸ் மாப்பிள் ளையூரணி ஆரம்ப சுகாதார உதவி மருத்துவர் வினோத், தாளமுத்துநகர் சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி, ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஸ்பாலன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தமிழ் செல்வி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, சக்திவேல், மகேஸ்வரி காமராஜ், உமாமகேஸ்வரி தங்கபாண்டி, ஜீனத்பீவி, தங்கமாரிமுத்து, மாப்பிள்ளையூரணி கூட்டுறவு கடன்சங்க துணைத்தலைவர் சிவக்குமார், கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பாலமுருகன், தெற்கு மாவட்ட திமுக அணி மாவட்ட சுற்றுச்சுழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, துணை அமைப்பாளர் ஜீவா, மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதி சப்பாணி முத்து, உன்னத் பாரத் அபியன் திட்ட ஒருங்கிணைப்பாளரும் ஏ.பி.சி.மகாலெட்சுமி மகளிர் கல்லூரி உதவி பேராசியருமான சண்முகபிரியா, திமுக ஒன்றிய துணை செயலாளர்கள் ராமச்சந்திரன், வசந்தகுமாரி, கூட்டுறவு நியாயவிலை கடை விற்பனையாளர்கள், சமூக ஆர்வலர் வக்கீல் மாடசாமி, மாரி, அனிஸ், தனிப்பிரிவு ஏட்டு முருகேசன் மற்றும் கௌதம், உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img