fbpx
Homeபிற செய்திகள்சாலையில் திரியும் மாடுகளை பிடிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் தீவிரம்

சாலையில் திரியும் மாடுகளை பிடிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் தீவிரம்

மேட்டுப்பாளையத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த மாடுகளை பிடிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேட்டுப்பாளையத்தில் சமீப காலமாக அன்னூர், கோவை, சிறுமுகை, ஊட்டி, கோத்தகிரி செல்லும் சாலைகளில் ஆடு, மாடு மற்றும் இதர கால்நடைகள் சுற்றித்திரிகின்றன.

இதனால் அடிக்கடி வாகன விபத்துகளும், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. ஆங்காங்கே சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இந்த நிலையில் மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் நகர் மன்றத்தலைவர் மெஹரீபா பர்வீன், ஆணையர் அமுதா உள்ளிட்டோர் இணைந்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கால்நடைகளை வளர்க்க வேண்டும்.

மீறுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் விதிக்கப்படும் என நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

நகராட்சியின் எச்சரிக்கையினையும் மீறி கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிந்து வந்தன. இதனையடுத்து இன்று காலை முதல் நகராட்சி ஊழியர்கள் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு பேருந்து நிலையம் பின்புறமுள்ள உள்ள நீருந்து நிலையத்தின் அருகே கட்டி வைக்கப்பட்டு பின்னர் அதன் உரிமையாளர்கள் வரவழைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட உள்ளது என தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img