கோவை பாலன் நகரில் தியாக நண்பர்கள் குழு சார்பில் சாதனையாளர் விருது வழங்குதல், குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல், மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தியாக நண்பர்கள் குழு தலைவர் பி.என்.லட்சுமணன் வரவேற்புரை நிகழ்த்தி னார். டாக்டர் சுகுமாரன் தலைமை உரை ஆற்றினார்.
விழாவில் கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக சேவையாற்றிய டாக்டர் பி.சுகுமாரன், டாக்டர் எம்.எஸ்.மயில்சாமி, டாக்டர் வி.அரவிந்தன் ஆகிய மருத்துவர்களுக்கு “மரு த்துவ சேவா ரத்னா” விருதும் நிர்மலா கல்லூரி டீன் டாக்டர் ஆர்.மல்லிகாவுக்கு சிறந்த கல்வியாளர் விருதும் வழங்கப் பட்டது.
சந்திரசேகர் மற்றும் ஆடம் அப்பாத்துரை (பிற்பகல், ஆப்டர் நூன் நாளிதழ்கள்) ஆகிய இருவருக்கும் சேவா ரத்னா விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. அதேபோல பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரிக்கு சிறந்த என்எஸ்எஸ் யூனிட் விருதும், பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு சிறந்த என்சிசி யூனிட் விருதும் வழங்கப்பட்டது.
விருதுகளை துணை காவல் ஆணையாளர் (கோவை தெற்கு) சண்முகம் வழங்கி பேசியதாவது: தாய், தந்தையர் அன்பு, அரவணைப்பால் வளர்க்கப்படும் குழந்தைகளே பிற்காலத் தில் சாதனையாளர்களாக மாறுகிறார்கள்.
என்எஸ்எஸ் மற்றும் என்சிசி இரு பிரிவிலும் இருக்கும் மாணவர்கள் நல்ல நெறியாளர் களாகவும் நல்ல பண்பாளர்களாகவும் மாறுகிறார்கள்.
இவர்களே நாளைய இந்தியா வின் சிற்பிகளாக ஆக முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் 25 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால் மற்றும் காலிபர் உபகரணங்கள் வழங்கப்பட்டது. கண் பார்வையற்ற 10 ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.