fbpx
Homeபிற செய்திகள்நாலாட்டின்புத்தூர், கழுகுமலை பகுதிகளில் தூத்துக்குடி ஆட்சியர் ஆய்வு

நாலாட்டின்புத்தூர், கழுகுமலை பகுதிகளில் தூத்துக்குடி ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் நாலாட் டின்புத்தூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கழுகுமலை பேரூராட்சி பகுதி களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் மேல்நிலை நீர்த்தேக் கத் தொட்டி, நீரேற்றும் நிலையத்தினை மாவட்ட ஆட் சியர் மரு.கி.செந்தில்ராஜ், செய் தியாளர்களுடன் சென்று பார்வையிட்டார்

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் தெரிவித்ததாவது:
கழுகுமலை பசும் பொன் நகரில் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக தானியங்கி மோட்டாருடன் அமைக்கப்பட்டுள்ள நீர்தேக்க தொட்டி, சங்கரலிங்கபுரம் மேம் பாலம் அருகில் கழுகுமலை பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சரிசெய்யும் பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டேன்.

கழுகுமலை பேரூராட்சியில் 25000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். இங்கு 9 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் இருந்து 12 மோட்டார்கள் மூலம் பம்ப் செய்து கிட்டத்தட்ட 45 கி.மீ. தூரத்திற்கு நாலாட்டின்புதூர் வழியாக கழு மலைக்கு தண்ணீர் வருகிறது.

இத்திட்டத்தில் மோட்டார்களில் பழுது மற்றும் குழாய்கள் 15 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்டவை என்ப தால் பழுதுகள் இருந்தன. இவை அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப் படுகின்றன.
நாலாட்டின்புத்தூர் நீரேற்றும் நிலையத்தில் 9 லட்சம் லிட்டர் தண்ணீர் பம்ப் செய்யப்படுகிறதா என்பதை கண்டறிய மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

9 லட்சம் லிட்டர் தண்ணீரும் கழுகுமலைக்கு செல்கிறதா என்பதை கண்டறிய அங்குள்ள நீர்தேக்க தொட்டியில் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
குழாய்களில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள பழுதுகள் சரிசெய்யப்பட்டு வரும் காலங்களில் முழுமையாக தண்ணீர் கிடைக்க வழிவகைகள் செய்யப்படும்.

தற்போது பருவமழையினை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். பருவமழை அதிகமாக பெய்தால் மணி முத்தாறு அணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து அதிகளவு விநியோகம் செய்யப்படும்.

இருந்தாலும் குடிநீர் வழங்கல் துறை மூலமாக 350 கியூசஸ் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவ்வாறு தண்ணீர் வரும்பட்சத்தில் கழுகுமலை பேரூராட்சியில் குடிநீர் பிரச்சனை இருக்காது.

கழுகுமலையில் 2 கிணறுகள் மூலமாகவும் தண்ணீர் விநி யோகம் செய்யப்பட்டு வருகி றது. கிட்டத்தட்ட 85 மண் டலங்களாக பிரித்து தண் ணீர் வழங்கப்படுகிறது.
கழுகு மலையில் தண்ணீர் பிரச்சனை இல்லாத அளவுக்கு கூடிய விரைவில் மாற்றப்படும்.

கோவில்பட்டிக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக உள்ள 4 மின் மோட்டார்களில் 2 மோட்டார்கள் பழுதாகி இருந்தது. ஒரு மாதத்திற்கு முன்பு தூத்துக்குடி பாராளு மன்ற உறுப்பினரின் அறி வுறுத்தலின்பேரில் அந்த மோட் டார்கள் பழுது நீக்கப்பட்டன. இன்னும் 2 மோட்டார்கள் கேட்டுள்ளார்கள். அதுவும் வழங்கப்படும்.

கோவில்பட்டி நகராட்சிக்கு தனியாக குழாய் அமைத்து குடிநீர் வழங்கப்படுகிறது. கோவில்பட்டி நகராட்சியில் தண்ணீர் சீராக வழங்குவதற்காக 16 நீர்தேக்க தொட்டிகளிலும் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

ஆலோசனைக்கூட்டம்

உள்ளாட்சித்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சிகளுக்கு தேவையான நிதி குறித்து அறிக்கை அனுப்புமாறு அறி வுறுத்தியுள்ளார்கள். இது தொடர்பாக இந்த வாரத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்படும்.

காவல் நிலையங்களை ஆய்வு செய்யுமாறு தலைமை செய லாளர், டி.ஜி.பி. ஆகியோர் அறிவுறுத்தியதற்கிணங்க நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தை ஆய்வு செய்தேன்.

காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா, காவல் நிலையங்கள் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா, மக்களுக்கு சேவைகள் முறையாக வழங்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தேன்.

நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தின் மூலம் 6 இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் சரியாக இயங்கி கொண்டிருக்கின்றன. பதிவேடுகளும் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ்.

குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ராமசாமி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் (பொ) ஜெயா, கழுகுமலை பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், கோவில்பட்டி வட்டாட்சியர் (மு.கூ.பொ) ராஜ்குமார், கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் கே.வெங் கடேஷ், காவல் ஆய்வாளர் சுகாதேவி, கழுகுமலை பேரூராட்சித் தலைவர் அருணா, துணைத் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

படிக்க வேண்டும்

spot_img