மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை எஸ்விஜிவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாவது ஆண்டு உலக யோகா தினத்தையொட்டி பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று யோகாசனங்களை மேற்கொண் டனர்.
இதில் ஆசனா பிராணயாமம், பிரத்தியாகாரம்,தரானா, சூரிய நமஸ்காரம், புஜங்காசனம், சலபா சனம், மச்சியாசனம், சர்வாகாசனம், தனு ராசனம் உள்ளிட்ட 30க் கும் மேற்பட்ட யோகா சனங்கள் பள்ளி மாணவ மாணவிகள் செய்தனர்.
இந்த யோகா நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் பழனிச்சாமி, முதல்வர் சசிகலா, செயலாளர் ராஜேந்திரன், அறங்காவலர் தார கேஸ்வரி, நிர்வாக அலுவலர் சிவ சதீஷ்குமார், யோகா பயிற்சியாளர் ராமச்சந்திரன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.