நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட, தட்டனேரி, பன்னிமாரா ஆகிய குக்கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மலைவேடன் சாதி சான்று வழங்கிட கோரியது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் நேற்று (ஜூன் 20) ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் தட்டனேரி, பன்னிமாரா ஆகிய குக்கிராமங்களில் உள்ள பொதுமக்களிடம் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை, மருத்துவம், சாலை உள்ளிட்ட வசதிகள் உள்ளனவா என்று கேட்டறிந்தார்.
பொதுமக்களின் குடியிருப்புகளை பார்வையிட்டு, குடும்ப உறுப்பினர்களிடம் குடும்பத் திலுள்ள நபர்களின் விவரங்கள் மற்றும் மின்னணு குடும்ப அட்டைகளின் உள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைகளை பார்வையிட்டார்.
ஆய்வின்போது உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, உதகை ஊராட்சி ஒன்றிய தலைவர் .மாயன் (எ) மாதன், உதகை வட்டாட்சியர் ராஜசேகர், உதகை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர் உட்பட பலர் இருந்தனர்.