fbpx
Homeபிற செய்திகள்சென்னையில் நந்தோவின் தீயில் சுட்ட பெரி பெரி சிக்கன் அறிமுகம்

சென்னையில் நந்தோவின் தீயில் சுட்ட பெரி பெரி சிக்கன் அறிமுகம்

உலக அளவில் மிகவும் பிரபலமான நந்தோ உணவகத்தின் அதன் சிறப்புமிக்க தயாரிப்பான தீயில் சுட்ட பெரி பெரி சிக்கன் தற்போது சென்னை பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி மாலில் உள்ள உணவகத்தில் சென்னை உணவுப்பிரியர்களை கவர்ந்திழுக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


நந்தோ என்பது போர்த் துகீசிய மொழியில் வீடு என்று பொருள்.
டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட இடங்களில் உணவுப் பிரியர்களின் மிகுந்த வரவேற்பை பெற்ற, நந்தோ தற்போது அதிக மசாலா நிறைந்த உணவை விரும்பும் சென்னை நகர மக்களுக்காக அதன் பெரி-பெரி சுவை சிக்கனை கொண்டு வந்துள்ளது


இது குறித்து நந்தோ’ஸ் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி சமீர் பாசின் கூறுகையில், “சென்னை நகர மக்கள் மசாலா நிறைந்த நல்ல சுவையான உணவுகளை அதிகம் விரும்புகிறார்கள்.


எனவே எங்களின் இந்த பெரி-பெரி சிக்கன் அதை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும். இது இந்தியாவில் எங்கள் வளர்ச்சி பயணத் திற்கான ஒரு துவக்கம்“ என்றார்.


இந்நிலையில் சென்னை நகர மக்களுக்கு தங்களின் தனித்துவமான சுவையை கொண்டு வரும் வகையில் நந்தோஸ் விரைவில் தனது 2வது உணவகத்தை எக்ஸ் பிரஸ் அவென்யூ மாலில் திறக்க உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img